உலகம் முழுவதும் சுற்றி வந்து வாழ்க்கையை அனுபவிக்க முடிவு செய்த காய்- நீனா தம்பதியினர்
#Dubai
#India
#TamilNadu Police
Mani
2 years ago

பெர்லின் நகரை சேர்ந்த காய்- நீனா தம்பதியினர் துபாயில் குடியேறி அங்குள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் பணி புரிந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் சுற்றி வந்து வாழ்க்கையை அனுபவிக்க முடிவு செய்த இவர்கள் பத்து லட்சம் ரூபாயில் ஒரு பேருந்தினை வாங்கி அதனை 40 லட்சம் ரூபாய் செலவில் சமையல் அறை, குளியல் அறை படுக்கை அறை வசதியுடன் ஏசி, டிவி ஃபிரிஜ் வசதிகளுடன் கூடிய சொகுசு வீடாக மாற்றினர். கடந்த வருடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துபாயில் பயணத்தை தொடங்கியவர்கள் இருநூறு நாட்களை கடந்து நேற்று மாமல்லபுரம் வந்துள்ளனர்.
காய் இதுவரை 22 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
இவர்களது குழந்தைகள் இருவரும் தினமும் சொகுசு பேருந்திலேயே லேப்டாப் மூலம் 6 மணி நேரம் ஆன்லைனில் படிக்கின்றனர்.



