தொடர்ந்து நான்கு ஏவுகணை சோதனை - வடகொரியா
#world_news
#SouthKorea
#NorthKorea
#America
Mani
2 years ago
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதிப்பதில் பெயர் பெற்ற நாடு வட கொரியா.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே எல்லை மோதல் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. வடகொரியா தனது எதிரிகளாக கருதும் தென்கொரியாவையும், அமெரிக்காவையும் தூண்டிவிட ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று வடகொரியா தொடர்ந்து நான்கு ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் வாஷிங்டனில் ராணுவப் பயிற்சி நடத்தி வருவதற்கு பதிலடியாக வடகொரியா இந்த ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடித்து வருகிறது.