IMFஇன் பதிலை விரைவுபடுத்த சர்வதேச ஆதரவை நாடியுள்ள இலங்கை

#IMF #money #SriLanka #Central Bank #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
IMFஇன் பதிலை விரைவுபடுத்த சர்வதேச ஆதரவை நாடியுள்ள இலங்கை

நிதி மற்றும் உதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுபடுத்துவதற்கு இலங்கை இன்று சர்வதேச ஆதரவை நாடியுள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, நேற்று வெளியுறவு அமைச்சகத்தில் பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின் தூதரகத் தலைவர்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு விளக்கமளித்தபோதே இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சமரதுங்க ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது இலங்கை தரப்பு, இராஜதந்திரிகளிடம் விளக்கமளித்தது.

இந்தநிலையில், நிதி மற்றும் ஆதரவு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான பதிலுக்காக இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை பிரதிநிதிகள் தமது வலியுறுத்தலை விடுத்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!