சிறுவனின் சிகிச்சைக்கு 11.5 கோடி நன்கொடை வழங்கிய அடையாளம் தெரியாத நபர்

#Kerala #Disease #world_news #America
Mani
2 years ago
சிறுவனின் சிகிச்சைக்கு 11.5 கோடி நன்கொடை வழங்கிய அடையாளம் தெரியாத நபர்

கேரளாவை சேர்ந்த சிறுவன் நிரவன். இந்த சிறுவனுக்கு Spinal Muscular Atrophy என்ற விநோத நோய் இருந்தது. இந்த நோயை குணப்படுத்த அமெரிக்க நிறுவனம் தயாரிக்கும் Zolgensma என்ற மருந்து பயன்படுகிறது. ஒரே முறை செலுத்தப்படும் இந்த ஊசியின் விலை 17 கோடி ஆகும். எனவே , சிறுவனுக்கு சிகிச்சைக்காக பெற்றோர் கிரவுட் ஃபண்ட் வழியாக நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்.

5 கோடி ரூபாய் சேர்ந்திருந்த நிலையில், மீதி பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர் தவித்து கொண்டிருந்தனர். அப்போது, அமெரிக்காவை சேர்ந்த முகம் தெரியாத மனிதர் ஒருவர் 1.4 மில்லியன் டாலர்களை அதாவது, இந்திய மதிப்பில் 11.5 கோடி ரூபாயை சிறுவனுக்கு மருந்து வாங்க அனுப்பியிருந்தார். இதனால், சிறுவனின் பெற்றோர் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தனர். விரைவில் அமெரிக்காவில் இருந்து மருந்து மும்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!