20 மடங்கு பெரிய சூப்பர் மெகா நகரத்தை உருவாக்கும் சவுதி அரேபியா

சினிமா பாணியில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தில் ஆச்சரிய நகரத்தை அமைக்கிறது சவுதி அரேபியா.சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் மெகா நகரத்தை உருவாக்குவது ஆகும்.
புதிய திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டு உள்ளது. அரபு மொழியில் கன சதுரம் என்று பொருள்படும் முகாப், 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலம் மற்றும் 400 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும், இது உலகின் மிகப்பெரிய உட்புற நகரமாக இருக்கும்.இது அதன் சொந்த உள் போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருக்கும். விமான நிலையத்திலிருந்து சுமார் 20 நிமிட பயணத்தில் இது இருக்கும்.
சவுதி விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக ரியாத்தில் உலகின் மிகப்பெரிய நவீன நகரத்தை உருவாக்க சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது.இது ரியாத்தின் வடமேற்கில் கிங் சல்மான் மற்றும் கிங் காலித் சாலைகளின் சந்திப்பில் அமைய உள்ளது.
19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த புதிய நகரம் 104,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 9,000 ஓட்டல் அறைகள் ம மற்றும் பிற வசதிகளுடன் அமையும்.



