விவசாயியை தாக்கிய காட்டுப்பன்றி
#Tamil Nadu
#Tamilnews
Mani
2 years ago
 (1).jpg)
நீலகிரி பந்தலூர் அருகே உள்ள மாங்கொரஞ்சே பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 52). விவசாயியான இவர் கூவமூலையில் ஒரு தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். இவர் நேற்று அந்த தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது காட்டுப்பன்றி திடீரென அவரை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காட்டுப்பன்றியை விரட்டினர். பின்னர், காயமடைந்த இந்திரஜித்தை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனிடையே, தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர் கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், வன பாதுகாவலர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று இந்திரஜித்துக்கு ஆறுதல் கூறினர்



