சென்னை பெரவள்ளூரில் குப்பை தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் மீட்க்கப் பட்டது.

#baby #Tamil Nadu
Mani
2 years ago
சென்னை பெரவள்ளூரில் குப்பை தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் மீட்க்கப் பட்டது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு, முத்துக்குமாரப்பா சாலையில் உள்ள குப்பை தொட்டியில், 5 மாத ஆண் குழந்தை இறந்து கிடப்பதாக, பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை தொட்டியில் கிடந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தை எப்படி இறந்தது? குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசியது யார்? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!