உர மூட்டை ஒன்றின் விலையை குறைக்க நடவடிக்கை! விவசாய அமைச்சு

#SriLanka #Food #Lanka4 #prices #sri lanka tamil news #Tamilnews
Mayoorikka
2 years ago
உர மூட்டை ஒன்றின் விலையை குறைக்க நடவடிக்கை! விவசாய அமைச்சு

இவ்வருடம் 50 கிலோ கிராம் எம்.ஓ.பி. உர மூட்டை ஒன்றின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2022/23 உயர் பருவத்தில் 42,000 மெற்றிக் தொன்  உரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதுடன்  50 கிலோ கிராம் பொதி ஒன்று19,500 ரூபாவுக்கு விற்பனையானது.  இது அப்போதைய உலகசந்தை உர விலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டாலும், அதிக விலை காரணமாக பல விவசாயிகள் இந்த உரத்தை வாங்கவில்லை.

MOP உரம் இருப்பில் இருந்து இதுவரை 3000 மெட்ரிக் தொன் அல்லது மொத்த உர இருப்பில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இம்முறை சில நெற்பயிர்களில்  மஞ்சள் நிறமாக காணப்படுவதற்கு MOP உரம் இடாதமையே காரணம் என விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!