அணு ஆயுத ஏவுகன் பரிசோதனையை கைவிடும்படி வடகொரியாவிடம் அமெரிக்கா வலியுறுத்துதல்

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது, ஆனால் வடகொரியா இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியாவும் ஏவுகணை சோதனைகளை பொதுவெளியில் நடத்தி வருகிறது.
இந்நிலையில் வடகொரியா இன்று கிழக்கு நோக்கி இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனை தென்கொரியா உறுதி செய்துள்ளது.வடகொரியாவின் சுக்ஷோன் பகுதியில் காலை 7 மணி முதல் 7:11 மணி வரை இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதை பார்த்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைகளின் தளபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"நாங்கள் கண்காணிக்கிறோம் மற்றும் தீவிரமாக கவனித்து வருகிறோம், எங்கள் இராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் முழுமையாக தயாராக உள்ளது," என்று அவர் கூறினார்.
அமெரிக்காவும் தென்கொரியாவும் நேற்று கூட்டு விமானப் பயிற்சியில் ஈடுபட்டன. பயிற்சியின் போது, தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்தின் மீது B-1B குண்டுவீச்சு விமானம் பறந்தது. அமெரிக்க F-16 போர் விமானங்கள் தென் கொரிய F-35A போர் விமானங்கள் மற்றும் F-15K ஜெட் விமானங்களுடன் இணைந்து பறந்தன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் (18ம் தேதி) வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) சோதித்தது. ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ஏவுகணை விழுந்ததாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்தார்.
இந்த ஏவுகணை சோதனையானது வடகொரியாவை எதிர்த்துப் போராடும் திறனுக்கு சிறந்த உதாரணம் என்றும், ஐசிபிஎம் அதன் முழுத் திறனையும் எட்டியுள்ளது என்றும் வடகொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்காவும், தென்கொரியாவும் நேற்று ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வடகொரியா இன்று 2 முறை ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஆண்டு வடகொரியாவின் 3வது ஏவுகணை சோதனை இதுவாகும், இது எதிரி நாடுகளுக்கு எதிராக ஆத்திரமூட்டல் ஆகும்.



