ஜேவிபி அரசாங்கம் தனியார் சொத்துக்களை கையகப்படுத்தும், சஜித் பிரேமதாச தெரிவித்து வருவதை மறுத்த அனுர

#Sajith Premadasa #Election #Election Commission #Lanka4
Kanimoli
2 years ago
ஜேவிபி அரசாங்கம் தனியார் சொத்துக்களை கையகப்படுத்தும், சஜித் பிரேமதாச தெரிவித்து  வருவதை மறுத்த அனுர

ஜேவிபி அரசாங்கம் தனியார் சொத்துக்களை கையகப்படுத்தும், சஜித் பிரேமதாச தெரிவித்து  வருவதை, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மறுத்துள்ளார்.

ஜேவிபியின் கொள்கை அறிக்கையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி சஜித் பிரேமதாசவிடம் உட்பட்டவர்கள் இந்த விடயத்தை வெளியிட்டு வருவதாக அனுரகுமார குறிப்பிட்டார்.

வரும் காலப்பகுதிகளில் ஜேவிபி காலப்போக்குக்கு ஏற்ப தமது கொள்கைகளை மாற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 சஜித் பிரேமதாச தமது தகவல்களை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சஜித் பிரேமதாச உட்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்ற ஜேவிபியின் கொள்கை, 1979 ஆம் ஆண்டு தமது மாநாட்டில்  கொள்கை அறிக்கையாக அங்கீகரிக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டு சோசலிச முகாம் மிகவும் வலுவாக இருந்தபோது வெளியிடப்பட்டது.

எனினும் 43 வருட இடைவெளியில், வலுவான சோசலிச முகாம் சரிந்தது. புதிய அரசியல் முகாம்கள் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ரஷ்யா போன்றவற்றின் அடிப்படையில் உருவாகின.
மக்களின் அபிலாஷைகள், தொழில்நுட்பம், சந்தை, தகவல் தொடர்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறிவிட்டது.

இந்தநிலையில், உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப 2000, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி பல புதிய செயற்திட்டங்களை வெளியிட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!