இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு,இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் - இந்திய மின்சக்தி அமைச்சு

#SriLanka #sri lanka tamil news #Electricity Bill #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு,இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் - இந்திய மின்சக்தி அமைச்சு

இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது 

 ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா 25 இலங்கை ரூபாய்களை மட்டுமே செலவிடுகிறது.
எனினும் இலங்கை தற்போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 52 இலங்கை ரூபாவை செலவிடுகிறது.
இலங்கை தனது மின் உற்பத்திக்காக பெருமளவு நிலக்கரியை நம்பியிருப்பதே இந்த செலவு இடைவெளிக்கு முக்கிய காரணம் என் தெரிவிக்கப்படுகிறது 

இலங்கையில் காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய சக்தியும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் சதவீதம் குறைவாகவே உள்ளன.

இந்தநிலையில், சூரிய சக்தி, அணுசக்தி, காற்றாலை மற்றும் நிலக்கரி போன்ற பல ஆற்றல் உற்பத்தி ஆதாரங்களின் விகிதாசார பயன்பாடு காரணமாக இந்தியா தனது ஆற்றல் உற்பத்தி செலவை பெருமளவில் குறைத்துள்ளதாக இந்திய மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!