வலி. மேற்கு பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட வட்டார வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
#Election
#Election Commission
#Lanka4
Kanimoli
2 years ago

சமூக மேம்பாட்டு ஆணையத்தின் வலி. மேற்கு பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட வட்டார வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு இன்றையதினம் முதலிய கோவில் - அம்பாள் சனசமூக நிலைய வளாகத்தில், சமூக மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுஜிந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வேட்பாளர்கள் அருகில் உள்ள ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். பின்னர் மங்கள விளக்கேற்றறப்பட்டு வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வேட்பாளர்களது அறிமுகம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



