ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்களும் 46 பொதுமக்களும் பலி
#Syria
#Attack
#Death
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. மேலும் இது போன்ற பல்வேறு அமைப்புகள் அங்கு செயல்பட்டு வருகின்றது.
இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் சிரியாவில் உள்ள பயங்கரவாதிகள் தளத்தை குறிவைத்து அவ்வப்போது வான்வழி தாக்குதலும் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் சிரியாவில் உள்ள பாலைவனப் பகுதியான அல்சொக்னா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்களும் 46 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



