மனைவியின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய நபருக்கு 36 ஆண்டுகள் சிறை

15 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியின் சகோதரியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய 56 வயதுடைய நபருக்கு 36 வருட கடுங்காவல் தண்டனையும் ரூபா 15000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 06 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி திரு.பிரியந்த லியனகே கடந்த 16ஆம் திகதி உத்தரவிட்டார்.
கதிர்காமத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹேரத் முதியன்சேலாகே வீரசேகர என்ற 56 வயதுடைய நபருக்கே சிறைத்தண்டனைஇ அபராதம் மற்றும் நட்டஈடு விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் 01.02.2008 முதல் கதிர்காமத்தில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் தங்கியிருந்த மனைவியின் சகோதரி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை எழுப்பி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதே இரவில், இது தொடர்பான சம்பவம் தொடர்பாக, சிறுமி வலியால் அலறி, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது சகோதரியை அழைத்துள்ளார். ஆனால் சகோதரி எழுந்திருக்கவில்லை என பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மறுநாள் காலை, தனது சகோதரியிடம் மைத்துனரால் ஏற்பட்ட பிரச்சனையை கூறியதும், இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் தை;துனர் கேட்டதை கொடுத்து சமாளித்துக் கொள்ளுமாறும் அக்கா கூறி உள்ளார்.
இதனால், சிறுமி மிகவும் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ளார், மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரும் அதை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தின் போது சிறுமியின் தாயும் தந்தையும் கொழும்பு பிரதேசத்தில் தொழில் செய்வதால் சிறுமியின் பாதுகாப்பிற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் தங்கியிருந்தனர்.
தனது சகோதரியின் கணவரால் ஏற்பட்ட இந்த தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி கொழும்பில் உள்ள தனது தாயிடம் தொலைபேசியில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
சில மாதங்களுக்குப் பிறகு சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி சிறுமியின் மூத்த சகோதரனும் தாயும் சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி கதிர்காமம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், ஆரம்ப விசாரணையின் பின்னர் சட்டமா அதிபர் 03 குற்றப்பத்திரிகைகளின் கீழ் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.
விசாரணையின் போதுஇ குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கீழ்க்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் என்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்காக 36 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் ஒரு குற்றச்சாட்டிற்கு தலா 5000 ருபா அபராதமும், 15000 ருபா அபராதமும், அதை செலுத்தாவிட்டால் தலா 06 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 06 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவருக்கு உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் அதை செலுத்தவில்லை என்றால், கூடுதலாக 02 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.



