தேசிய ஒத்துழைப்பு வழங்ககூடிய நாடு தேவை. இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி - அனுரகுமார திஸ்ஸநாயக்க

#Sri Lanka President #Jaffna #Election #Election Commission #Lanka4
Kanimoli
2 years ago
தேசிய ஒத்துழைப்பு வழங்ககூடிய நாடு தேவை. இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி - அனுரகுமார திஸ்ஸநாயக்க

தேசிய ஒத்துழைப்பு வழங்ககூடிய நாடு தேவை. இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் எற்பாட்டில் யாழ் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடான சந்திப்பு இன்று 17.02.2023 று யாழ். டீம்பர் மண்டவத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துதெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

ஒன்றாக பாதுகாக்கப்படுகின்றனர் இந்த நாட்டினை அழிவுக்கு கொண்டுவந்தது இந்த மோசடியாளர்களால் ஆகவே இந்த நாட்டுக்கு நல்ல அரசாங்கம் தேவை  மோசடிக்காரர்களுக்கு  தண்டணை வழங்குகின்ற அரசாங்கம் தேவை மோசடிசெய்த மீண்டும் பெற்றுக்கொள்ளுகின்ற அரசாங்கம் வேண்டும். அதற்காக ஒன்றினைய வேண்டும்.

இந்த நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறுகின்றார் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை வழங்குவோம் என்று. பொலிஸ், காணி, அதிகாரத்தினை வழங்குவோம் என்று கூறுகின்றார். இது ஏன்? தென் பகுதி பெரிய பிரச்சினையினை உருவாக்கி அங்கு ஆர்ப்பாட்டங்களை உருவாக்க  உண்மையான பிரச்சினை ஆட்சியாளர்களுக்கு எதிராக இருக்கின்றது. அதனைவிடுத்து ஆட்சியாளர்களுக்கு எதிராக  சிங்கள மக்களை குழப்பி வடமாகாண தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுத்துகின்றார்.

இந்த ஜனாதிபதி நான்கரை வருடங்கள் பிரதமராக இருந்தார். புதிய அரசியலமைப்பு யாப்பினை தயாரிப்பதற்கு ஒரு சபை தாபிக்கப்பட்டது. அதில் ஒரு குழுவினை அமைத்தனர். இதில் 82 கலந்துறையாடல்கள் இடம்பெற்றன.

அதில் எந்ததொரு அறிக்கையும் புதிய அரசியலமைப்பு யாப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்கவில்லை.

வடக்கின் பிரச்சினை வடக்கின் சூதாட்டாமான நிலையினை வைத்துயிருக்கவேண்டிய நிலையினை உருவாக்கதான் வடக்கில் தேர்தல் வரும்போது 13 ஆவது திருத்தச் சட்ட பந்தினை  வடக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்கினேஸ்வரன், தென் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இருவரும் பந்து அடித்து விளையாடுகின்றனர் என்றார்.

இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட  அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!