இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

#President #TamilNadu President #Tamil Nadu #Tamilnews #Yoga
Mani
2 years ago
இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் திரவுபதி முர்மு முதன் முறையாக இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார். டெல்லியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையத்திற்கு 11.40 மணிக்கு வரும் குடியரசு தலைவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்என். ரவி வரவேற்கிறார். 11.50-க்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படுகிறார். பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், தெற்குவாசல், கீழவாசல் சந்திப்பு, விளக்குத்தூண், வெங்கலக்கடை தெரு வழியாக கிழக்கு சித்திரை வீதிக்கு மதியம் 12.5 மணிக்கு வந்தடைகிறார். 12.15 மணிக்கு அம்மன் சன்னதி பகுதியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள நிலையில் விமான நிலைய பணியாளர்கள், காவல் அதிகாரிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோயில் வரை 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ள சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளன. நகரில் அனுமதியின்றி ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் அவர், மாலை 6 மணியளவில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!