மனைவியின் கழுத்தை பிளேடால் அறுக்க முயன்ற அரசு கல்லூரி பேராசிரியர் கைது
#Murder
#Staff
#Police
#TamilNadu Police
#Tamil Student
#Tamil Nadu
#wife
Mani
2 years ago
.png)
சென்னை அருகே காதல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், மாறுவேடத்தில் சென்று மனைவியின் கழுத்தை பிளேடால் அறுக்க முயன்ற அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமிக்கு திருமணமாகி ஜெயவாணி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று எழும்பூர் ஆங்கிலோ இந்தியன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயவாணியை வழிமறித்து அடையாளம் தெரியாத நபரொருவர், பிளேடால் முகத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றார்.
வழக்குப்பதிந்த எழும்பூர் போலீசார், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, மாறுவேடத்தில் வந்து ஜெயவாணியை கொலை செய்ய முயன்ற நபர், அவரது கணவர் குமாரசாமி என தெரியவந்தது.



