எரிசக்தி அமைச்சை முற்றுகையிட்ட மக்கள்: பொலிசார் எச்சரிக்கை
#SriLanka
#Electricity Bill
#Power
#Protest
#Police
#Arrest
#Lanka4
Mayoorikka
2 years ago

மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (17) எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக மக்கள் குழுவொன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மின்கட்டண அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்துங்கள் என்ற கோசத்தின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அமைச்சின் பிரதான வாயிலை மூடுமாறு பதாகை ஒன்றையும் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதான வாயிலை முற்றுகையிட வேண்டாம் என்றும், அப்படி செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



