பணியில் இருந்து அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் குறித்து தகவல் கேட்டு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
#Tamil Nadu
#education
Mani
2 years ago

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுமுறை குறித்த குறிப்பிட்ட தகவல்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள், நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள், தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள் (அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள்). மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இ-மெயில் மூலம் உடனே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



