TNPSC : குரூப் 2 மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் முறை
#exam
#Tamil Nadu
#Tamil People
#Tamil Student
#Tamil
#Tamilnews
Mani
2 years ago
.jpg)
TNPSC குரூப் 2 முதன்மை எழுத்துத் தேர்வை 25.2.2023 அன்று தேர்வு மையத்தில் நடத்த உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வில் பங்கேற்க நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் தேர்வு வாரியத்தின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் OTR டாஷ்போர்டு மூலம் மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் உங்களின் OTR பதிவு எண்ணைப் பயன்படுத்தி உங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



