சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

#M. K. Stalin #Tamilnews #history
Mani
2 years ago
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி  எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார், பயணத்திற்கு முன்பாக சேலத்தில் நல திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர். 

அவர் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் தங்கினார்,  சேலம் ஏற்காடு சாலையில் பயணித்து திடீரென்று முகப்பை மட்டும் தற்போது முகவரியை கொண்டுள்ள கலைஞரின் காலடிபட்ட மாடரன் தியேட்டர் முன்பு இறங்கி செல்பி எடுத்து மகிழ்ந்தார்.முதல்வராக இருந்த போதும் எளிமையோடு நின்று, தனது தந்தை கலைஞரின் நினைவுகளால் அவர் செல்பி எடுத்த நிகழ்வை மக்கள் வரவேற்றனர்.

 திருச்செங்கோடு ராமசுந்தரம் என்னும் டி.ஆர்.சுந்தரத்தால் 1935ம் ஆண்டு சேலம்-ஏற்காடு சாலையில் நிறுவப்பட்டது மாடர்ன் தியேட்டர்ஸ். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் கருணாநிதி, புரட்சி நடிகர் எம்ஜிஆர், வி.என்.ஜானகி என்று 3 பேர், தமிழக முதல்வர்களாகவும் பொறுப்பு வகித்து மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!