அதிமுக இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு- ஐகோர்ட்டில் நாளை விசாரணை
#Tamilnews
#Tamil Nadu
#அரசியல்
#Court Order
Mani
2 years ago

சென்னை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க., அமைப்புச் செயலர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருமடங்கு வாக்காளர் பதிவு உள்ளது. இந்த வாக்குகள் போலி வாக்குகளாக பயன்படுத்தப்படலாம் என்று மனுவில் சி.வி.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது.



