இலங்கை பிரதிநிதிள் இறையாண்மைக் கடன் வட்டமேசையின் முதல் மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்பார்கள்

#IMF #Dollar #money #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
 இலங்கை பிரதிநிதிள் இறையாண்மைக் கடன் வட்டமேசையின் முதல் மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்பார்கள்

கடன் கோரும் இலங்கை பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையில், சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17ஆம் திகதியன்று, புதிய இறையாண்மைக் கடன் வட்டமேசையின் முதல் மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. .

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய 20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும், தங்கள் சொந்த கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நடுத்தர வருமான நாடுகளின் அதிகாரிகளும் இந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி 20 குழுவின் தற்போதைய தலைவரான இந்தியா ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படும்.
மேலும் ஜி 20 நிதி அதிகாரிகள் எதிர்வரும் 23-25. வட்டமேசையின் நேரடி சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

வட்டமேசையில் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் துறை பங்கேற்பாளர்களின் பாரிஸ் கிளப் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இன்ஸ்டிடியூட் ஒஃப் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் (ஐஐஎஃப்), சர்வதேச மூலதன சந்தைகள் சங்கம் மற்றும் அடையாளம் காண வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட இரண்டு தனியார் துறை நிதி நிறுவனங்களும் அதில் பங்கேற்கவுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!