புத்தள நிலநடுக்கத்திற்கான காரணம் வெளியானது
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
புத்தல பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்திற்கு இந்திய - அவுஸ்திரேலியா டெக்டோனிக் தகடுகளில் ஏற்பட்ட விரிசலே காரணம் என்று பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தோ - அவுஸ்திரேலிய தட்டுக்கு நடுவே இடம்பெறும் இந்த மோதல் சுமார் 15-20 ஆண்டுகளாக வேகமாக நடந்து வருவதாகவும், விளிம்பில் இருக்கும் நாடு என்பதால் இலங்கை சிறிய நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சிறிய நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சுமார் 1000 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்த தட்டுக்கள் மோதுவதால், எதிர்காலத்திலும் குறிப்பிடத்தக்க ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று பிற்பகல் வெல்லவாய - புத்தல - பெலவத்த பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நில அதிர்வுகள் பதிவாகியிருந்ததுடன் இன்று அதிகாலை 3.48 மணியளவில் 2.3 அலகுகளாக ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் குறித்து, மக்கள் தேவையற்ற அச்சத்தில் கொள்ள வேண்டாம் என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.



