குஜராத் : 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு

#Earthquake #India #Tamilnews
Mani
2 years ago
குஜராத் : 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு

கடந்த 6 தேதி துருக்கி சிரியாவில் பயங்கர நிலநடுக்கத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதை முன்கூட்டியே கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க் தெரிவித்தார். அதை ஒட்டி இந்தியாவிலும் 6  மாநிலங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், அவர் கூறியபடியே குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் ஐந்து புள்ளி இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!