துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய 8 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்பு படை

துருக்கி - சிரியா நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது.
இஸ்தான்புல்,
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் எல்லையொட்டி காசியான்டெப் நகரத்தில் அதிகாலை திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு, 7.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தின் சியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. இந்த நிலநடுக்கம் அதிகாலையில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியன. வீடுகளில் சிக்கிருந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுக்காயத்தில் உள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலக நாடுகள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 'ஆப்ரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் துருக்கிக்கு நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும், இந்தியா மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் 152 பேர் துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தின் நுர்டஹி பகுதியின் கட்டிட இடுபாட்டுக்குள் சிக்கியிருந்த 8 வயது சிறுமியை பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
முன்னதாக நேற்று அதேபோல, 6 வயது சிறுமியை இந்திய மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.மேலும், இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழந்த 13 பேரில் உடல்களை மீட்டுள்ளனர்.



