இலங்கையில் விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதாக கூறி வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள்

#Arrest #Women #SriLanka #sri lanka tamil news #Lanka4 #prostitute
Prathees
2 years ago
இலங்கையில் விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதாக கூறி வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள்

இலங்கையில் விபச்சாரத்திற்கு அனுமதி உண்டு என கூறி வெளிநாட்டு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவரை சிறுவர் மற்றும் மகளிர் பணியக குழுவினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்த பெண்களை வரவழைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி லட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கும் மோசடியில் இந்த பெண்கள் ஈடுபட்டு வருவதாகவும் பணியகம் குறிப்பிடுகிறது.

சந்தேக நபர்கள் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வெள்ளவத்தையில் உள்ள வீட்டில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அவர்களால் அழைக்கப்பட்ட கென்ய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 300 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் தான் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு மணி நேரத்திற்கு 120 டொலர்கள் வரை தான் விற்கப்பட்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக கூறியதால், வாக்குறுதி அளித்த தொகை கூட வழங்கப்படவில்லை என்றும், அதனை நம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!