பொருளாதார நெருக்கடி காரணமாக 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள Yahoo நிறுவனம்

#world_news #Social Media #work #Tamilnews #Lanka4 #லங்கா4
Prasu
2 years ago
பொருளாதார  நெருக்கடி காரணமாக 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள Yahoo நிறுவனம்

கொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், இணைதள தேடிபொறி நிறுவனமான 'யாகூ' 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

பொருளாதார நிலைத்தன்மையின்மை காரணமாக செலவை குறைக்க தங்கள் நிறுவனத்தின் 12 சதவிகித ஊழியர்களான 1,000 பேரை யாகூ இந்த வாரம் பணி நீக்கம் செய்ய உள்ளது. 

அதேபோல், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய யாகூ திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!