மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையில் நடந்த சண்டையில் மாமனார் பலி.. மருமகன் கைது..

#Police #Arrest #Death #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Prathees
2 years ago
மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையில் நடந்த சண்டையில் மாமனார் பலி.. மருமகன் கைது..

மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாமனார் உயிர் இழந்ததாகவும் சந்தேகநபரான மருமகன் நேற்றை  தினம் இரவு ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதலில் ஹட்டன் திக் ஓயா ஒடரி தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருபன் காமராஜன் (வயது 62) என்பவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 3 மணியளவில் மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மாமனாரை  வீட்டினுள் வைத்து தள்ளி விட்டதாகவும் அவர்  விழுந்து தலையில் பலத்த காயமடைந்ததால், மாமனார் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குடும்ப தகராறு தொடர்பாக தனது மாமனாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், ஹட்டன் நீதவான்  பரிசோதனையை மேற்கொண்டார்.

அங்கு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்குமாறு ஹட்டன் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!