எருமை மாட்டின் கழுத்தை வேறாக்கிய கார் விபத்து: ஒருவர் பலி
#Accident
#Police
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamilnews
Prathees
2 years ago

மாத்தளை ரிவர்ஸ்டன் ஊடாக லக்கல வீதியின் பத்தனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவர் பயணித்த கார் ஒன்று 300 அடி பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கார் விழுந்ததில் எருமை மாடு ஒன்றின் தலை வேறாக பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
வீதியை விட்டு விலகிச் சென்ற கார் சுமார் 300 அடி பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, அப்போது பொலிஸ் சார்ஜன்ட் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் பயணித்துள்ளனர்.
விபத்துக்கு இலக்காகி சார்ஜன்ட் மனைவி உயிரிழந்துள்ளதுடன், சார்ஜன்ட் உள்ளிட்டோர் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



