தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Election
#Election Commission
#Colombo
Prabha Praneetha
2 years ago
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை பிற்போட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஓய்வுபெற்ற கேர்னல் டப்ளிவ் எம்.ஆர் விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
தேர்தலைப் பிற்போடும் நீதிப்பேராணையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.