இலங்கையை வந்தடைந்த அமெரிக்க முகவரமைப்பின் நிதியளிப்புடனான 600 மெட்ரிக் தொன் அரிசி கப்பல்

#United_States #rice #துறைமுகம் #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க முகவரமைப்பின் நிதியளிப்புடனான 600 மெட்ரிக் தொன் அரிசி கப்பல்

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு செயற்திட்ட அறிக்கையொன்றின்படி, இலங்கை சனத்தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவீதமானோர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முன்முயற்சிகள் மற்றும் புதிய நிதியிடல்கள் மற்றும் உணவு ஏற்றுமதிகள் ஊடாக இந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்காவானது இலங்கை அரசாங்கம், WFP மற்றும் பிற பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவிசெய்வதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதியளிப்புடனான 600 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட அரிசியினைக் கொண்ட முதலாவது தொகுதி கடந்த வாரம் இலங்கையை வந்தடைந்தது.

இந்த கப்பற்சரக்குகள், 3,950 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட அரிசி, 768 மெட்ரிக் தொன் சிவப்பு பருப்பு, 1,188 மெட்ரிக் தொன் சோயா மற்றும் திட்டமிடப்பட்ட 2,310 மெட்ரிக் தொன் சோளம் ஆகியவற்றை உள்ளடக்கிய USAID மற்றும் WFP ஆகியவற்றின் ஒரு பெரிய உணவு உதவி முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த உதவியானது 1.7 மில்லியன் பிள்ளைகள் மற்றும் 300,000 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாடசாலை உணவு மற்றும் போசாக்கு குறைநிரப்பிகளை வழங்குவதற்கு உதவிசெய்யும்.

“அமெரிக்கா-இலங்கை உறவுகள் இந்த ஆண்டு 75 வருட நிறைவினைக் கொண்டாடுகின்றன, மற்றும் எங்களுடையது நட்பு மற்றும் பங்காண்மையின் கதையாகும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கூறினார். 

“குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் உட்பட பல இலங்கையர்களுக்கு போசாக்கான உணவிற்கான அணுகலை இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறைத்தபோது அமெரிக்க மக்கள் விரைவாக பதிலளித்தனர். 

இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்கான எங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த கப்பற்சரக்குகள் பிரதிபலிக்கின்றன.” என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!