துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆயிரத்தை எட்டியது

#Turkey #Syria #world_news #Earthquake #SriLanka #Death #Tamil People #people
Prabha Praneetha
2 years ago
துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் -  பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆயிரத்தை எட்டியது

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது 

இதற்கமைய, துருக்கியில் குறைந்தது 17,134 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது 1999 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

bb

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட உதவிகளை அவசரகால பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக நாடுகளை உலுக்கிய துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 19,362 ஆயிரத்தை தாண்டியுள்ளது .

இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர்.

bb

அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இந்நிலையில், டெக்டானிக் தட்டு பகுதிகளில் அமைந்துள்ள துருக்கி தட்டுகளிடையே ஏற்பட்ட மோதலால், 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும் என இத்தாலிய நிலநடுக்க அறிவியலாளர் பேராசிரியர் கார்லோ டாக்லியோனி கூறியுள்ளார்.

bb

இது அண்டைய நாடான சிரியாவுடனான மதிப்பீட்டில் அராபிக்கா தட்டுடன் தென்மேற்கு பகுதியை நோக்கி அனடோலியன் தட்டு நகர்ந்ததில் இந்த பயங்கர நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!