கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கண்டு பிடிக்கப்பட்ட மதுபான போத்தல்கள்: சுகாதார உதவியாளர் கைது

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வார்டு ஒன்றில் சுகாதார உதவியாளர் ஒருவரின் அலமாரியில் இருந்து விசேட முத்திரையுடன் கூடிய 7 அரசாங்க மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் 'திவயின'விடம் தெரிவித்தார்.
வைத்தியசாலை நிர்வாக திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த மது போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மதுபான போத்தல்களை அலமாரியில் மறைத்து வைத்திருந்த சுகாதார உதவியாளரும் பிடிபட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் பணியாற்றும் சிலருக்கு விற்பனை செய்வதற்காக இந்த மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார உதவியாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
45 வயதான சுகாதார உதவியாளர் மருதானை பொலிஸாரிடம் நிர்வாகத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



