கடவுச்சொல்லை பகிர்ந்தால் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ள பிரபல Netflix நிறுவனம்

#technology #Social Media #world_news #Tamilnews #Lanka4 #லங்கா4
Prasu
2 years ago
கடவுச்சொல்லை பகிர்ந்தால் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ள பிரபல Netflix நிறுவனம்

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரே நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பயன்படுத்துவதுதான் என அந்நிறுவனம் கருதுகிறது. 

இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்தது. 

அதன்படி, முதற்கட்டமாக கனடாவில் ரூ.491, நியூசிலாந்தில் ரூ.418, போர்ச்சுக்கல்லில் ரூ.353, ஸ்பெயினில் ரூ.531 வரை என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதேபோல இந்தியாவிலும் கட்டணம் முறை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!