சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் இருக்காது - இம்ரான் கான்

#Pakistan #ImranKhan #PrimeMinister #India #government #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் இருக்காது - இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் லாகூரில் உள்ள தனது இல்லத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களின் சட்டசபைகள் கடந்த மாதமே கலைக்கப்பட்டுவிட்டன. இந்த மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை எதிர்த்தும் தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும் அகிம்சை முறையில் சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன். 

இதில் முதல் ஆளாக நான் சிறைக்குச் செல்வேன். சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் இருக்காது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். 

இந்தியா முன்னேறுவதற்கு காரணம், அங்கு சட்டத்தின் ஆட்சி இருப்பதுதான். இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், 

அதற்கு முதலில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திருப்பி அளிக்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!