துருக்கியில் பாதிப்படைந்தோருக்காக முகாம்களாக மாறிய மைதானங்கள்

#Turkey #Earthquake #Death #நிலநடுக்கம் #துருக்கி #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
துருக்கியில் பாதிப்படைந்தோருக்காக முகாம்களாக மாறிய மைதானங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி அன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இடிபாடுகளுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இவர்களை இரவும், பகலாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால், கடும் குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேக்ஸர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தெளிவாகத் தெரிகிறது.

அந்த புகைப்படங்களில், உயரமான கட்டிடங்கள் இருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான அவசரகால நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதேபோல், துருக்கியில் உள்ள விளையாட்டு மைதானங்களிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், நிலநடுக்க சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!