உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரிக்கக்கூடும் - உலக உணவுத்திட்டம் எச்சரிக்கை

2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத மதிப்பீட்டு முடிவுகளின்படி, இலங்கையில் 33 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன.
எனினும் 2019 ஆம் ஆண்டில், நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை அளவு 9.1 சதவீதமாக இருந்தது என்று உலக உணவுத்திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பத்தில் ஏறக்குறைய ஏழு குடும்பங்கள், உணவு அடிப்படையிலான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிக்கின்றன, மேலும் பெரும்பாலான குடும்பங்கள் குறைந்த விருப்பமான உணவை உட்கொள்கின்றன.
உணவு மற்றும் எரிபொருள் விலைகள் பல குடும்பங்களுக்கு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
ஐம்பத்தெட்டு சதவீத குடும்பங்கள் கடனுக்கு உணவை கொள்வனவு செய்கின்றன.
முப்பது சதவீத குடும்பங்கள் போதிய உணவு நுகர்வை பெறுகின்றன
43 சதவீதத்தினர் வரையறுக்கப்பட்ட பகுதிகளை உட்கொள்கின்றனர்.
ஆண் தலைமைத்துவக் குடும்பங்களை விட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்து மோசமாக உள்ளன.
டிசம்பரில் நகர்ப்புறங்களை விட பெருந்தோட்டங்கள்; மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில், வரவிருக்கும் மாதங்களில் பெரும்போகச்செய்கையின் குறைந்த விளைச்சல், குறைவான உற்பத்தித்திறன், இறக்குமதி கட்டுப்பாடுகள், வெள்ளம் போன்ற பருவமழை பாதிப்புகளால் காய்கறி உற்பத்தி குறைப்பு, பண்டிகைக் காலத்திற்கான உணவுக்கான அதிக தேவை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணிகளால், உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரிக்கக்கூடும் என்று உலக உணவுத்திட்டம் எச்சரித்துள்ளது.



