தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உயிரிழப்பில் திடீர் திருப்பம்: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

#SriLanka #Death #Court Order #Police #Crime #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உயிரிழப்பில் திடீர் திருப்பம்: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

தொழிலதிபர் தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது.

 தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உடலுக்குள் கலந்ததால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றவேளை இந்த விபரம் வெளியாகியுள்ளது.

சிஐடியினர் மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய முன்னிலையில் இந்த விடயங்களை சமர்ப்பித்துள்ளனர்.

தினேஸ் சாப்டரின் ஐபோன் மற்றும் ஐபாட்டினை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியவேளை பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

பொரளை கனத்த மயானத்தில் காருக்குள் கட்டப்பட்டிருந்த நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!