மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் - பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை
#SriLanka
#sri lanka tamil news
#Power
#power cuts
#Power station
#Lanka4
#Electricity Bill
Prabha Praneetha
2 years ago

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என பல தரப்பினரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வர்த்தக சபை உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்று பலரும் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.



