இலங்கைக்கு வந்துள்ள கப்பலிலிருந்து நிலக்கரிகளை இறக்குவதில் சிக்கல்!
#SriLanka
#Power station
#Hydropower
#sri lanka tamil news
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

இலங்கைக்கு வந்துள்ள நிலக்கரி கப்பலுக்கு பணம் செலுத்துவதற்கு தற்போது பணம் இல்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்க்கா கொண்டு வரப்பட்ட நிலக்கரிகளை இறக்குவது கடினம் எனஅந்த நிறுவனத்தின் தலைவர் திரு.ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களுக்கும் 30% பணம் செலுத்தப்பட்டாலும் மீதமுள்ள தொகையை கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கும் முன் செலுத்த வேண்டும் என நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பணத்தை செலுத்துவதற்கான நிதி தற்போது போதுமானதாக இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



