இந்திய சுகாதார அமைச்சரைச் சந்தித்தார் இலங்கை உயர்ஸ்தானிகர்
#India
#SriLanka
#Meeting
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Prathees
2 years ago

இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நேற்று இந்திய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும், இலங்கை இறக்குமதியாளர்களுக்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே உள்ள இந்தியக் கடனை திறம்பட மற்றும் திறமையான முறையில் பயன்படுத்துதல் உட்பட்ட விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.
இதேவேளை இலங்கையின் சில வலயங்களில் இந்தியாவின் மருந்து உற்பத்தி நிலையங்களை நிறுவுவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.



