இந்தியாவையும் ஜப்பானையும் உளவுப்பார்த்ததாக சீனா மீது குற்றச்சாட்டு
#India
#China
#America
#world_news
#Tamilnews
#Lanka4
Prathees
2 years ago
உளவுப் பலூன்களை பறக்கவிட்டு அமெரிக்காவை மாத்திரமல்ல. இந்தியாவையும் ஜப்பானையும் சீனா உளவுப்பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெ வோசிங்டன் போஸ்ட் இதனை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வான்வெளியில் சுமார் 60ஆயிரம் அடி உயரத்தில் பறந்தநிலையில் சீனாவின் பலூன் ஒன்று அண்மையில் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இது பொதுப்பயன்பாட்டை கொண்டது என்று சீனா கூறியுள்ளபோதும், உளவு பலூன் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையிலேயே இவ்வாறான பலூன்களை பயன்படுத்தி, சீனா, இந்தியாவையும் ஜப்பானையும் உளவுப்பார்த்தாக தெ வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த உளவுப்பலூனை சுட்டு வீழ்த்திய பின்னர், அமெரிக்கா, சுமார் 40 நாடுகளின் தூதர்களை அழைத்து கலந்தாலோசனைகளை நடத்தியுள்ளது.