13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஜனாதிபதி மக்கள் ஆணையைப் பெற வேண்டும்: அபயதிஸ்ஸ தேரர்
#Colombo
#Protest
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
#SriLanka
#Sri Lanka President
Prathees
2 years ago
13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி வாக்கெடுப்புக்குச் சென்று மக்கள் ஆணையைப் பெற வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரி கோட்டை பரகும்பா பிரிவேனாவுக்கு அருகில் இன்று காலை ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது.
இதில் பெருமளவான பிக்குகள் கலந்து கொண்டதுடன், பொல்துவ சந்தி ஊடாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.