32 கிராமி விருதுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க பாடகி

#America #Cinema #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
32 கிராமி விருதுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க பாடகி

உலக அளவில் இசைக்கு வழங்கப்படும் விருதுகளில் முக்கியமான ஒன்று கிராமிய விருது ஆகும். அதாவது திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அதே போல தான் இசைக்கு கிராமிய விருது. 

அந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான கிராமிய விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்த விழாவில் உலகப் புகழ்பெற்ற இசை கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறந்த நடனம் பிரிவில் பிரேக் மை சோல் என்ற பாடலுக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடலாசிரியரும் பாடகியுமான பியோன்ஸ் என்பவர் விருதை பெற்றார். 

மேலும் அவர் சிறந்த “ஆர் அண்ட் பி” ஆல்பம் உள்பட மூன்று பிரிவுகளில் விருதுகளை தட்டி சென்றுள்ளார். இதனால் இவர் 32 கிராமி விருதுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

அதேபோல சிறந்த பாடல் ஆல்பம் விருதை பியோன்ஸ் நான்காவது முறையாக தவற விட்டுள்ளார். இந்த விருதை இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான ஹாரி ஸ்டைல்ஸ் என்பவர் “ஹாரிஸ் ஹவுஸ்” என்ற பாடல்களாக விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!