அலெப்போவில் நிலநடுக்கத்தில் மீட்கப்பட்ட பிறந்த குழந்தை - சோகத்தில் மூழ்கிய மக்கள்
#SriLanka
#Lanka4
#Tamilnews
#baby
#world_news
#Earthquake
#லங்கா4
#Syria
Prabha Praneetha
2 years ago

இன்று வரை தொடரும் நிலநடுக்கம் உலகம் முழுவதும் தெரிந்ததே , அதேவேளை ஒரு தம்பதியினருக்கு நிலநடுக்கத்தில் பிரசவ வலிஎடுத்து பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்து அடுத்தகணம் தாய் , மற்றும் தந்தை உயிரிழந்தமை அப்பகுதியை சேர்ந்த மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
இதன் காரணமாக இந்த பெண் குழந்தை அதிசய குழந்தையென அழைக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தை மற்றும் அதன் குடும்பத்தினர் தொடர்பில் தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், அவர்கள் சிரியாவின் கொடூரமான போரால் டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரினுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
வடகிழக்கு சிரியாவின் அஃப்ரின் கிராமப்புறத்தில் உள்ள ஜெண்டரஸில், இருள், மழை மற்றும் குளிர் சூழ்ந்துள்ளதால், பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரைக் காப்பாற்ற மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது ..



