துருக்கி நிலநடுக்கம்: இலங்கைப் பெண் ஒருவர் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை
#Turkey
#Syria
#Earthquake
#Death
#world_news
#Tamilnews
#Lanka4
Prathees
2 years ago

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைப் பெண் ஒருவர் தொடர்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியுள்ள 16 இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 15 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அளவு தொடர்ந்து வெளிவருவதால், பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.



