கார் விபத்தில் உயிரிழந்த விஞ்ஞானியின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது

#SriLanka #Death #Accident
Mayoorikka
2 years ago
கார் விபத்தில் உயிரிழந்த விஞ்ஞானியின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது

அண்மையில் கும்புக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நானோ தொழில்நுட்ப நிறுவக விஞ்ஞானி விமுக்தி பிரசாத் ஜயவீரவின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது மரணத்திற்கான உண்மைகள் வெளியாகியுள்ளன.

விபத்துக்குள்ளான காரின் ஓட்டுனர் இருக்கையின் பாதுகாப்பு பலூனில் இருந்த இரும்புத் துண்டு அவரது தொண்டையில் சிக்கியதால் மரணம் நிகழ்ந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

ஹொரணை வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் பிரனீத் விஜேசுந்தர பிரேத பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.

எனினும் பாதுகாப்பு பலூன் இயக்கப்பட்டு அதன் ஒரு பகுதி குறித்த வாகனத்தில் பயணித்த நபரின் உடலில் மோதி உயிரிழப்பது அரிதான நிகழ்வாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!