அப்போ என்னை கலைச்சது நினைக்க...கண் முட்டி விழி வழி நீர் கசிகிறது எனக்கு. என்ன ஆனந்தமோ? இன்றைய கவிதை 08-02-2023.
Mugunthan Mugunthan
2 years ago
அப்போ என்னை
கலைச்சது நினைக்க
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
அட போங்கப்பா
இப்படி ஒரு
கேள்வியை இப்போ
ஏனோ கேட்டுப்புட்டிங்க.
கண் முட்டி
விழி வழி நீர்
கசிகிறது எனக்கு.
என்ன ஆனந்தமோ?
என் மனசு கனக்க
உமக்கென்ன பூரிப்போ?
கையில் காசு இல்ல.
படம் பார்க்கனும்.
மனசுக்கு ஒரு ஆசை.
ஆமாய்யா.
நான் போயிட்டன்.
திரையரங்கு உள்ள.
ஊர் திரையரங்கு.
சொந்தக் காரன்
கண்டு புடிச்சிட்டான்.
கலைச்சுப் போட்டான்.
நிறைய படம்
பார்த்தாச்சு அப்போ?
இப்போ என்னவோ
நினைச்சா கவலை.
கலைச்சது தான்
கனக்க தெரியுமா?
மரத்தில ஏறி பாத்தன்.
கொட்டகை இடையால.
இருந்தும் பாருப்பா
இப்பவும் நினைச்ச
ஒரு முலையில எனக்கு
சந்தோசம் வருது.
........ அன்புடன் நதுநசி.