ஏமாற்றிட......நின்று சொல்லு, நீதி வழி நீ வாழ்ந்தது உண்டா? இப்போதே எண்ணு. இன்றைய கவிதை 05-02-2023
#Poems
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago
ஏமாற்றிட
===========
நின்று சொல்லு
நீதி வழி நீ
வாழ்ந்தது உண்டா?
இப்போதே எண்ணு.
நொடிகள் கடந்து
போன போதும் நீ
படிகள் கடக்கும்
நிலையும் தவறலாம்.
நேர்மை வழி நீ
வாழ்ந்தால் மட்டும்
இங்கே நலம் வாழ
முடியாது காண்பாயோ?
சட்டங்கள் இங்கே
தெரிந்தால்தான்
சட்ட மீறல்கள் அப்போ
உனக்குத் தெரியும்.
ஏமாற்றும் முறை
நீ அறிந்தால் தான்
ஏமாற்றும் முறையில்
ஏமாறாது வாழலாம்.
ஏமாற்றம் விடுத்தால்
ஏழ்மை தானே ஒழியும்.
நானும் அங்கே
அப்படித்தான் வாழ்ந்தேன்.
........ அன்புடன் நதுநசி.